Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்இணையவழியில் நாளை இரு முக்கிய கலந்துரையாடல்கள்

இணையவழியில் நாளை இரு முக்கிய கலந்துரையாடல்கள்

அகத்தியர் மருத்துவ கூடலின் 3 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மேற்படி அமைப்பினரின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை(02.10.2022) இரு முக்கிய இணையவழிக் கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மார்பகப் புற்றுநோய் பற்றிய இணையவழி விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நாளை காலை-9 மணியளவில் அகத்தியர் மருத்துவ கூடலின் துணைத் தலைவர் செல்வி க.ஞானஹர்ஷனா தலைமையில் நடைபெற உள்ளது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவு சத்திரசிகிச்சை நிபுணர் எ.ஜே.தனேந்திரன் வளவாளராக கலந்து கொள்ள உள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாளை முற்பகல்-10.30 மணியளவில் தமிழர் வாழ்வியலில் ஏட்டுச் சுவடிகள் எனும் தலைப்பிலான இணையவழிக் கலந்துரையாடல் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெறும்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு தஞ்சாவூர் ஏடகம் நிறுவனத் தலைவர் முனைவர் மணி.மாறன் வளவாளராக கலந்து கொள்ள உள்ளார்.

மேற்படி இரு இணையவழிக் கலந்துரையாடல்களிலும் மட்டக்களப்புப் பொதுநூலக நூலகர் செல்வி த.சிவராணி, கொழும்பு கொட்டாஞ்சேனைப் பொதுநூலக நூலகர் கொல்வின் பர்ணந்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வர்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடல்களில் Meeting ID: 935 7439 2731,
Passcode: 426 270
ஊடாக இணைந்து கொள்ள முடியும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular