Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்பாடசாலை மாணவர் மத்தியில் போதைப் பொருள் பாவனை: இன்று இணையவழிக் கலந்துரையாடல்

பாடசாலை மாணவர் மத்தியில் போதைப் பொருள் பாவனை: இன்று இணையவழிக் கலந்துரையாடல்

பாடசாலை மாணவர் மத்தியிலான போதைப் பொருள் பாவனை எனும் தலைப்பிலான இணையவழிக் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை(01.10.2022) மாலை-6 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற உள்ளது.

மேற்படி கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் மருத்துவர் கோ.ரஜீவின் நெறிப்படுத்தலில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ் அதிதிப் பேச்சாளராக கலந்து கொள்ள உள்ளார்.

சகல பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ,சமூக ஆர்வலர்கள் அனைவரையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறும், கலந்து கொள்வதற்கான Meeting ID: 614 8761 9596, Passcode: OBA1@Jfn எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular