fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

யுவன் ஷங்கர் ராஜா நயன்தாரா படத்துக்கு இசை அமைக்கவில்லை

தமிழ் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியான நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர். இப்போது அவரின் கொலையுதிர் காலம் என்ற படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கவில்லை என்று கூறுவதாக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி  அவரின் இயக்கத்தில் உருவாகி  வருகிற கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் யுவன் ஷங்கர் ராஜா பிரமாண்ட பாலிவுட்டின் நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்து வந்த நிலையில் பல காரணங்களால் யுவன் படத்தை முடிக்காமலேயே தயாரிப்பை நிறுத்தியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா நயன்தாரா படத்துக்கு இசை அமைக்கவில்லை

     முழு படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவருமா சந்தேகம் நிலவி வந்த நிலையில் எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் படத்தின் தமிழ் உரிமையைப் பெற்று இருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சக்ரி, நடிகை நயன்தாரா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா யாரும் இல்லாமல் நேற்று வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தின் டிரைய்லர் வெளியான சில மணிநேரத்தில் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

Related posts

”கொரானா எதிரொலி” இழுத்து மூடப்படும் தியேட்டர்கள், முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!

TamilTwin India

நவ. 9 பாண்டிச்சேரியில் மாநாடு, சிம்புவின் அரசியல் ஆரம்பம்..!!

TamilTwin India

பல வருடங்கள் கழித்து இணையும் சூர்யா – கௌதம் மேனன்!!!

N N