fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களையும் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரங்கள் காலாவதியாகியிருப்பினும் தற்போதைய கொரோனா நிலைமையைக் கருத்திற் கொண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள மோட்டார் வாகன திணைக்களம் சலுகை காலத்தை மார்ச் முதல் ஜூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள ஆறு மாதங்களும், ஜூன் முதல் செப்டெம்பர் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற 3 மாதங்களும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சலுகை காலத்தைத் தாண்டாத சாரதி அனுமதிப்பத்திரங்கள் பொதுத் தேர்தலில் வாக் களிப்பதற்கான அடையாள அட்டையாகக் கருதப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் பிரத்தியேக பேனைகளைப் பயன்படுத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவை நீலம் அல்லது கறுப்பு பேனையாக இருக்க வேண்டும் எனவும், அதில் எந்தவொரு கட்சி வேட்பாளரையும் ஊக்குவிக்கும் எந்த அடையாளமும், நிறமும், சின்னமும் இருக்கக் கூடாது எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் ஒருவர் தனக்கான சொந்த பேனாவைக் கொண்டு வர முடியாவிட்டால் அத்தகைய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பேனைகள் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு

World News

அடைமழையால் வெள்ளக்காடாக மாறிய யாழ். விவசாய நிலங்கள்: வெங்காயச் செய்கையாளர்கள் கடும் பாதிப்பு (Video,Photos)

TamilTwin

முன்னணி, ஈபிடிபி வெளி நடப்பால் யாழ் மாநகர அமர்வு தள்ளி வைப்பு

World News