fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

யோகி பாபு பேயாக களம் இறங்குகிறார்

தமிழ் சினிமா உலகில் முதன்மை கதாப்பாத்திரத்திலும் காமெடி நடிகராகவும் நடித்து வருபவர் யோகி பாபு.  இப்பொது இவர் மக்களின் மனத்தில் இடம் பிடித்த காமெடி நடிகராக இருந்து வருகிறார். காமெடி நடிகராக வலம் வந்த யோகி பாபு இப்பொழுது முதன் முதலில் பேயாக நடித்துள்ளார்.

யோகி பாபு பேயாக களம் இருக்குகிறார்

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனத்தில் இருக்கும்  திருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ என்ற படத்தில் யோகி பாபு பேய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னொரு நயாகனாக வீரசமர் நடித்துள்ளார். கதா நாயகியாக அமிதாராவ் நடித்துக்கிறார். மேலும் சேரன் ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோரும் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ். இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் முதலில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் இயக்குனர் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிபுலம் என்ற ஊரில் உள்ள இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுக்கிறார்கள். அதனால் வரும் பாதிப்பில்  ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் இப்படத்தின் கதை.  படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இப்படம் வரும் 22 – ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கணவருடன் உச்ச கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா

TamilTwin India

நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவுடன் ஜோடி சேர்ந்த யோகிபாபு!!

N N

ரஜினிக்காக உருவாகும் அறிவுஜீவிகள் வட்டம் ! இணைவாரா ரங்கராஜ் பாண்டே

TamilTwin India