தயிரில் உள்ள புரோட்டீன் பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால் கோடைகாலத்திற்கேற்ப சிறந்த உணவை நாம் செய்யலாம். இந்த தயிரைக்கொண்டு எப்படி தயிர் சேமியா செய்வது என்று பார்க்கலாம்.

சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேக வைத்தெடுக்கவும். பின் நீரை நன்றாக வடித்து விடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முந்திரி, உலர்திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்தெடுத்த பிறகு, அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சேமியாவில் சேர்க்கவும். தயிரைக் கடைந்து, பால், உப்பு ஆகியவற்றையும் சேமியாவில் கலந்து கிளறவும், பின் மல்லித்தழை, துருவிய காரட், முந்திரி, உலர்திராட்சை கொண்டு அலங்கரிக்கவும். இதை குளிரவைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
Ingredients
Instructions