Saturday, June 25, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்பள்ளிப் பாடப் புத்தகத்தில் யோகா.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரை!

பள்ளிப் பாடப் புத்தகத்தில் யோகா.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரை!

மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றது.

இந்த யோகா ஒலிம்பியாட் போட்டியானது இன்று துவங்கியுள்ளது. இந்தப் போட்டியில் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தப் போட்டியின் துவக்க நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மேலும் அவர் தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்ததுடன் சிறப்புரை ஆற்றவும் செய்தார்.

அமைச்சர் பிரதான் பேசுகையில், “பள்ளி பாடத் திட்டத்தில் யோகாவை ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும். நிச்சயம் அது மாணவர்களின் மன ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்.

மருத்துவம் சார்ந்த பல மருந்துகளுக்கு மாற்றாக யோகா உள்ளது. தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பாடத்திட்டத்தில் யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் யோகா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular