fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

படப்பிடிப்பின் போது ரத்தக் காயம் அடைந்த யாஷிகா, யோகிபாபு

காமெடி நடிகரான யோகி பாபு பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த தர்ம பிரபு படத்தைத் தொடர்ந்து ஜாம்பி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

   யாஷிகா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் ஜாம்பி படம் தயாராகி வருகின்றது. இதில் யாஷிகா ஆனந்த், யோகிபாபு காயம் அடைந்தது போன்ற புகைப்படத்தை யாஷிகா வெளியிட்டுள்ளார். எஸ் 3 தயாரிப்பு சார்பில் உருவாகும் ஜாம்பி படத்தில் யாஷிகா ஆனந்த், யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களோடு யூடியூப் பிரபலம் கோபி, சுதாகர், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா என பலர் நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பின் போது ரத்தக் காயம் ஆன யாஷிகா, யோகி பாபு

ஒரு நாள் இரவு நடக்கும் நிகழ்வை ‘ஜாம்பி’ என்ற படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பின் போது ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதை வெளியிட்ட யாஷிகா, “நான் யோகி பாபுவின் காமெடிக்கு ரசிகை ஆகி விட்டேன். ஒரு நாள் இரவு நடக்கும் நிகழ்வு தான் ‘ஜாம்பி’. இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும்.” என பதிவிட்டுள்ளார்.

Related posts

40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை புறப்பட்டார் சிம்பு!!

N N

பிரபல நடிகை பூஜாகுமார் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்!

TamilTwin India

சேலையில் அசத்தும் அனிகா வைரலாகும் புகைப்படங்கள்

TamilTwin India