fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் யாரும் எனக்கு இல்லை – நடிகர் யஷ் பேட்டி

                நடிகர் யஷ் கே. ஜி. எப் படத்தில் நடித்து இருந்தார்.  இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாரானது.  இப்படம் ஐந்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.  இவருக்கு தமிழ் நடிகர்கள் விஷால், ஆர்யா நண்பர்கள் ஆவர்.  தமிழில் கே. ஜி. எப் திரைப்படத்தினை விஷால் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் யஷ் இரண்டு வருடங்களுக்கு முன்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலிஸில் புகார் அளித்து இருந்தார்.  அதனை தொடர்ந்து மற்றொரு கன்னட நடிகரான  அர்ஜுன் தேவ் கடந்த ஆண்டு தனக்கும் கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்து இருந்தார்.  இவ்விரண்டு புகார்களும் விசாரிக்கப்பட்டன. 

கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் யாரும் எனக்கு இல்லை - நடிகர் யஷ் பேட்டி

      தற்போது கடந்த 7 – ம் தேதி பாரத் “ஸ்லம்” என்ற ரௌடி மற்றும் அவனுடன் இருந்த 4 பேரை போலிஸார் கைது செய்து உள்ளனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகர் ஒருவரை கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.  இதனை தொடர்ந்து இவர்கள் கொலை செய்ய இருப்பது நடிகர் யஷ் மற்றும் அர்ஜுன் தேவாக கூட இருக்கலாம் என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது பற்றி நடிகர் யஷ் கூறியதாவது, திரை உலகில் கொலை செய்யும் அளவிற்கு யாரும் இல்லை மேலும் இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி தான் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

Related posts

உதவி பொருட்களில் என் படத்தை போடாதீர்கள், கமல் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

TamilTwin India

தீபாவளி வெளியாகும் இரண்டாம் குத்து..!! ஏக்கத்தில் ரசிகர்கள்..!!

TamilTwin India

சூர்யா ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கிறது ஸ்பெஷல் டிரீட்!

TamilTwin India