யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்(Photos)

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை சனிக்கிழமை(21.5.2022) காலை-8.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-26 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 28 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-1.45 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-8.15 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை காலை-9.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் பிற்பகல்-5 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)