Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்காரைநகரில் இடம்பெற்ற தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு(Photos)

காரைநகரில் இடம்பெற்ற தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு(Photos)

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.பவானந்தனின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் அண்மையில் யாழ்.காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே குறித்த அமைப்புக்களின் அனுசரணையில் வேலணை துறையூரில் இரண்டு கட்டங்களாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் இடம்பெற்றிருந்தது. இந் நிலையில் மூன்றாம் கட்டமாக மேற்படி செயலமர்வு இடம்பெற்றது.

இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. ஸ்ரீரங்கநாதனால் இவர்களுக்கான செயலமர்வு சிறப்பாக நடாத்தப்பட்டது.

இந்த விசேட செயலமர்வுகளில் தீவக வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியைகள் சுமார் 160 பேர் வரை பங்குபற்றிப் பயனடைந்தனர்.

இதேவேளை, இவர்களுக்கான சான்றிதழ்கள் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் மற்றும் புங்குடுதீவு உலக மையம் ஆகியவற்றின் அனுசரணையில் தீவக கல்வி வலயத்தினால் விரைவில் வழங்கி வைக்கப்பட உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular