மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) உலகமெங்கும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது, நடிகை கௌதமி இந்த வருடம் மகளிர்தினத்தை வித்தியாசமான முறையில் கிராமத்து பெண்களுடன் கொண்டாடி உள்ளார்.
மகளிர் தினத்தைப்பற்றி குறித்து கௌதமி கூறும்போது, ‘ஒரு தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ என அனைத்துப் பாத்திரங்களையும் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் செய்பவள் தான் பெண். அத்தகைய பெண்களைக் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை தயவு செய்து அவர்களைக் காயப்படுத்தாதீர்கள்’ என்றார்

ஆண்களின் வாழ்க்கைப் போல் பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல, அது சிக்கல்களை மட்டுமே பெரும் அத்தியாயமாகக் கொண்டது. அவளின் ஒவ்வொரு நாளும் ஒரு போர்க்களம் தான். இத்தகைய போராளிகள் தான் உண்மையிலேயே ஹூரோக்கள்.
இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் போன்ற இடங்களின் கிராமத்து பெண்களுடன் கொண்டாடுவது எனக்கு பெருமையளிக்கிறது.
அவர்களின் ஆற்றல் மற்றும் தைரியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது மற்றும் எனக்கு உத்வேகம் அளித்த இந்தக் கிராமத்துப்பெண்களுக்கு என் நன்றிகள் என்றார். வருடத்தின் 365 நாட்களுமே விடுப்பு இல்லாமல் வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைத்த ஒருநாள் இந்நாள், என் சகோதரிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் இந்த மகளிர் தினம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் எனக் கூறினார்.