fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
தினகரன் அலுவலத்தில் ரூபாய் நோட்டுகளை வீசிய பெண்கள்
செய்திகள்

தினகரன் அலுவலத்தில் ரூபாய் நோட்டுகளை வீசிய பெண்கள்

சென்னை ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியானது மக்கள் அனைவரும் நன்கு அறிந்த தொகுதியாகும். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் தொகுதியாகும். ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதிமுக கட்சி இரு பிரிவுகளாக பிரிந்து திரு.ஒ.பன்னீர் செல்வம் மற்றும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு அணியாக அதிமுகவிலும், திரு. டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தும் போட்டியிட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

மேலும் தேர்தலின் போதே தினகரன் அணி டோக்கன் கொடுத்து வாக்கு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆர்.கே. நகர் சட்டமன்ற அலுவலகம் முன் திரண்ட பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, இடைத்தேர்தலின் போது 20 ரூபாய் உடன் டோக்கன் கொடுத்து தேர்தலுக்கு பிறகு 10 ஆயிரம் கொடுப்பதாக பொய் வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரித்தனர். மேலும் வெற்றி பெற்ற பிறகு தொகுதிக்கே வரவில்லை என்றும் கூறினர்.

மேலும் சாக்கடை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினர்.

Related posts

காணிகள் தொடர்பில் கோத்தபாய விடுத்துள்ள உத்தரவு

World News

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள்

TamilTwin

பதவி விலகுவதை நான்தான் தீர்மானிப்பேன்: சுமந்திரன் அதிரடி

World News