fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பயண பொதிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் – 200 தொலைபேசி அழைப்புகள்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

பயண பொதிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் – 200 தொலைபேசி அழைப்புகள்

கொழும்பில் பயண பொதிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இதன்போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் உதவுமாறு ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது!

World News

அமெரிக்காவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா: திணறும் டிரம்ப்!!

World News

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து தற்போது எழுந்துள்ள பிரச்சினை

World News