fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » ஏறாவூரில் கொரோனாவுக்கு பலியான பெண்
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

ஏறாவூரில் கொரோனாவுக்கு பலியான பெண்

கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலையா? கொலைக்களமா??: யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் (Video,Photos)

TamilTwin

11 பேர் உயிரை இழந்தனர்: சோகத்தில் மூழ்கடித்த படகு விபத்து!

World News

யாழில் கொரோனா பரிசோதனை: ஒருவருக்குத் தொற்று உறுதி!

N N