fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உலகச் செய்திகள் செய்திகள் பிரித்தானியா புலம்

லண்டன் புனித போல் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

லண்டனில் உள்ள புனித போல் (St. Paul’s Cathedral in London) தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

லண்டனில் பிறந்து, இஸ்லாம் மதத்தை தழுவிய ஷாபியா ஷாய்க் (Safiyya Shaikh) (வயது-37) என்பவருக்கே நேற்று (வெள்ளிக்கிழமை) தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர், புனித போல் தேவாலயம், லண்டனில் உள்ள சுரங்க ரயில் பாதை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த இடங்களில் சக்திவாய்ந்த வெடிபொருட்களைப் பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் வகையிலான மனநிலையுடன் இருந்த ஏனைய சிலருடன் தொடர்பினைப் பேணியிருந்தாக வழக்கறிஞர் அலிசன் மோர்கன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் மேலும் பலரையும் கொல்லவேண்டும் என்பதே அந்தப் பெண்ணுடைய குறிக்கோளாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த பெண், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்குரிய வணக்கத்தைச் செலுத்தி புன்னகையுடன் சிறைச்சாலைக்குச் சென்றதாக பிரித்தானிய செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts

பூனேயில் இடம்பெற்று வரும் இலங்கை – இந்திய இராணுவ கூட்டு பயிற்சி

World News

பிரித்தானியாவில் பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து மூடப்பட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஜிம்கள்

World News

லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரி பதவி ஏற்பு!

World News