Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்யாழில் இன்று பெண் வளர்ப்பு நாய்களுக்கு கருத்தடை முகாம்

யாழில் இன்று பெண் வளர்ப்பு நாய்களுக்கு கருத்தடை முகாம்

இன்று திங்கட்கிழமை(08.8.2022) யாழ்.நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெண் நாய்களுக்கு உரிய இலவச கருத்தடை முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாரதி சனசமூக நிலையம் (தாமரைவீதி- வண்ணார்பண்ணை), நாவலடி வைரவர் ஆலயம் (மயிலுவீதி- ஆறுகால்மடம்), வைரவர் ஆலயம் (மானிப்பாய்வீதி- ஆறுகால்மடம்), வராகி அம்மன் ஆலயம் அருகில்(கொக்குவில்)ஆகிய இடங்களில் நாய்களுக்கு உரிய இலவச கருத்தடை முகாம்கள் இடம்பெறும்.

எனவே, விருப்பம் உடையவர்கள் உங்களுடைய வளர்ப்பு பெண் நாய்களைக் கொண்டு வந்து இலவசமாக கருத்தடை செய்து கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular