சில மாதங்களுக்கு தமிழகத்தின் சாத்தான் குளத்தில் அப்பா மற்றும் மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்த சம்பவம் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அந்தவகையில் இப்போது நெல்லையில் மகனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்ல தாய் தடுத்தநிலையில், போலீசாரின் தாக்குதலால் அந்தத் தாய் தீக்குளித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
அதாவது நெல்லையின் சுத்தமல்லி சத்யாநகரைச் சேர்ந்த லட்சுமி மகள் சகுந்தலாவுக்கு பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகிய இருவர் உள்ளனர்.

சுத்தமல்லியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதை அடுத்து
போலீசார் நேற்று முன்தினம் பிரதீப், அதே பகுதியைச் சேர்ந்த அன்புராஜ், அருள் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
மேலும் பிரதீப் அண்ணன் பிரசாந்தையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்ல, தாயார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சகுந்தலாவை போலீசார் லத்தியால் தாக்கியதால் அவர் போலீசார் முன்னிலையில் சகுந்தலா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
ஆனால் மருத்துவமைக்குச் செல்லும் வழியில்சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார்.