fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஜிப்ஸி திரைக்கு வருமா : வருத்தத்தில் ஜீவா

நடிகர் ஜீவா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள ஜிப்ஸி திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பதிலளிக்க சென்னை உரிமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்  கடந்த 2014 ம் ஆண்டு அரசூர் மூவிஸ் உரிமையாளரான அம்பேத் குமார் பப்பாளி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். இந்த தொகையினை 3 மாத காலத்துக்குள் வட்டியுடன் திரும்பத் தருவதாக கூறியிருந்தார். இந்தத் தொகையை பப்பாளி திரைப்படத்தை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. பப்பாளி திரைப்படம் வெளியான பின்னரும் கூட அம்பேத்குமார் என்னிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தரவில்லை. இந்த நிலையில் நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தை அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

ஜிப்ஸி திரைக்கு வருமா : வருத்தத்தில் ஜீவா

     இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது எனவே வாங்கிய தொகையான ரூ 40 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ 45 லட்சமாக தராமல் ஜிப்ஸி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு உரிமையில் நீதிமன்ற நீதிபதி சசிகலா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக தயாரிப்பாளர் அம்பேத் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்கள். 

Related posts

ஆஸ்கார் வாங்க ரெடியாகிட்டேன், மகிழிச்சியின் உச்சத்தில் பார்த்திபன்

TamilTwin India

நாளை பிரமாண்டமாக எம்.என் நம்பியாரின் நூற்றாண்டு விழா!!

N N

ஹிந்தியில் காஞ்சனா படப்பிடிப்பை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

N N