கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அதேசமயம் உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கோரியுள்ளார்.

அத்துடன் உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கனடா மிக வன்மையாக கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உக்ரைனின் பௌதீக ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ரஷ்யா மதித்து செயற்பட வேண்டும் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரியுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.