Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்கணவர் கோமாவில் இருப்பதாக நினைத்து 1.5 ஆண்டுகளாக அழுகிய உடலுடன் உயிர் வாழ்ந்த மனைவி..

கணவர் கோமாவில் இருப்பதாக நினைத்து 1.5 ஆண்டுகளாக அழுகிய உடலுடன் உயிர் வாழ்ந்த மனைவி..

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில் வசித்தவர் விமலேஷ் தீக்‌ஷித். இவர் அவரது மனைவியுடன் கான்பூரில் வசித்து வந்துள்ளார்.

விமலேஷ் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விமலேஷ் அலுவலகத்திற்குச் சென்றபோது அலுவலகத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விமலேஷுடன் உடன் பணியாற்றிய பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கையில் விமலேஷ் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து விமலேஷ் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர் சக பணியாளர்கள்.

அதனைத் தொடர்ந்து விமலேஷ் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது மனைவி கணவர் இறக்கவில்லை என்றும், அவர் கோமாவில் இருப்பதாகவும் நம்பி வந்துள்ளார்.

விமலேஷ் மனைவி கடந்த 1.5 ஆண்டுகளாக தினமும் கங்கை நீரை விமலேஷ் உடல்மீது தெளித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் விமலேஷ் அலுவலகப் பணியாளர்கள், பென்ஷனுக்கு யாரும் விண்ணப்பிக்காததை அறிந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது விமலேஷ் உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு உடலை எரிக்க எடுத்துச் செல்வதாகக் கூற, விமலேஷ் மனைவி மறுத்ததுடன் கொண்டு செல்லாதீர்கள் என்று கதறி அழுதுள்ளார்.

அதன்பின்னர் அவரை சமாதானப்படுத்து மருத்துவரை அழைத்து வந்து அவர் இறந்துவிட்டதாகக் கூறி அதன்பின்னர் உடலை எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular