உத்தர பிரதேசம் மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டம் அருகே நவ்ரங்கா என்ற காவல் நிலையம் உள்ளது.
இந்த காவல் நிலையத்தில் ஷரிப் என்பவர் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருகிறார். ஷரிப்புக்கு கடந்தமாதம் உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த கையோடு விடுமுறை கிடைக்காத காரணத்தால் மீண்டும் வேலைக்குத் தொடர்ந்து வருகை புரிந்துள்ளார்.
மனைவியை தனது அம்மாவுடன் தங்க வைத்துள்ளார். இந்தநிலையில் திருமணமாகி விடுமுறை கிடைக்காமல் வேலைக்குச் செல்வதால் மனைவி கோபித்துக் கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மனைவியிடம் பேச பலமுறை போன் செய்துள்ளார். மனைவி கோபம் குறையாததால் போனை மாமியாரிடம் கொடுத்துள்ளார்.
இது தொடர்ந்ததால் எப்படியாவது விடுமுறை பெற வேண்டும் என்ற நோக்கில் உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார் ஷரிப்.
அந்தக் கடிதத்தில் திருமணமான கையோடு விடுமுறை எடுக்காமல் பணிக்குத் திரும்பியதால் மனைவி கோபமாக இருக்கிறாள். பேசவில்லை.
போனை எடுத்து என்னுடைய தாயிடம் போனை கொடுத்து விடுகிறாள். மருமகனின் பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வருவதாய் உறுதி அளித்துள்ளேன்.
விடுமுறை தரவில்லை என்றால் பெரும் பிரச்சினை ஆகிவிடும்” என்று கடிதம் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து உயர் அதிகாரி ஷரிப்புக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளார்.