fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி இலங்கை எப்போது தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது?

கமலா ஹரிஸ் அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைப் போன்று, இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று(08) ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸிற்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“நம்மைச்சார்ந்த பெண்ணொருவர் உலகிலேயே மிகவும் பலம்பொருந்திய பெண்ணாக மாறியுள்ளமை தெற்காசியாவைச் சேர்ந்த அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க விடயமாகும்.

இதனைப்போன்று இனம், மதம், சாதி போன்றவற்றை விடுத்து திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது?” என்பதாகும்.

Related posts

யாழ். அளவெட்டியில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கதிரைகள் வழங்கி வைத்த சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் (Video, Photos)

TamilTwin

யோகா, தியானத்தால் குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும்- பாபா ராம்தேவ்

World News

யாழ். சண்டிலிப்பாயில் வீடு புகுந்து அலைபேசிகளைத் திருடிய இருவர் கைது

World News