யாழ்.கொட்டடியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட, பொருளாதார நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பூமணி அம்மா அறக்கட்டளையினரால் சக்கர நாற்காலி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை(17.6.2022) பிற்பகல்-1 மணிக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கடளையின் இலங்கை நிர்வாகிகளான தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் விந்தன் கனகரட்ணம், உப தலைவர் மருத்துவர்.சி.செளந்தரராஜன், உப செயலாளர் மருத்துவர் இ.சற்குருநாதன், இணைப்பாளர் ரி.யோசேப், ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த சக்கர நாற்காலியை நேரடியாக கையளித்தனர்.
இதேவேளை, பூமணி அம்மா அறக்கட்டளை யாழ்.மாவட்டம் மற்றும் வடக்கின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)