fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை மாவு களி

முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடி செய்து அதோடு தேன்  கலந்து சாப்பிட்டு வந்தால் வலி குணமாகும்.  கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை மாவு களி

          கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.  தற்போது நிறைய மக்கள் தைராய்டினால் அவஸ்தைப்படுகின்றனர். அவர்கள் கோதுமையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. கோதுமையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே பால் பிடிக்காதவர்கள், கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை பிரட் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.

கோதுமை மாவு களி - Wheat Flour Pudding

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை மாவு களி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை மாவு களி Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 20 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • கோதுமை மாவு - 1 கப்
  • உப்பு - சிறிது
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 3 கப்

Instructions

கோதுமை மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும். பின் அடிகனமான கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.  கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.  தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவினை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.  கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.  சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

Related posts

டேஸ்ட்டியான மட்டன் உப்புக்கண்டம் குழம்பு!!

N N

தித்திக்கும் அசோகா அல்வா!!!

N N

சுவையான மாம்பழ மில்க்ஷேக்

N N