Saturday, May 28, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. இந்திய அரசு போட்ட தடாலடி உத்தரவு!

கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. இந்திய அரசு போட்ட தடாலடி உத்தரவு!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையானது மக்களை உலுக்கிய ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

மேலும் இந்தப் பிரச்சினையால் தங்கத்தின் இறக்குமதி பல நாடுகளுக்கும் குறைந்துபோக, இந்தியா உட்பட பல நாடுகளிலும் தங்கத்தின் விலை எகிறியது.

அதேபோல் மற்றொருபுறம் கோதுமை விலையும் உலகின் பல நாடுகளிலும் ஏறி வருகின்றது.

கோதுமை விலை ஏற்றத்தினை அடுத்து இந்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. 

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “உலக அளவில் கோதுமையின் விலையானது உயர்ந்து வருகிறது.  இந்தியாவின் உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மேலும் அண்டை நாடுகளையும் கருத்தில் கொண்டும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தவிர்க்க முடியாத சில நிர்பந்தமான சூழ்நிலைகளுக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.

ஏற்கனவே வெளிநாடுகளில் கோதுமைக்கான தொகையை பெற்ற கடிதம் வைத்திருப்போர் நிர்பந்தத்தின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.” என்று அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular