fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி இல்லை

                பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் கூட்டணியுடன் செயல்படுகின்றன.  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெறுகிறது.  நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதா கட்சியினை வீழ்த்துவதற்காக ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.  ஆனால் காங்கிரஸ் ஆம் ஆத்மி உடன் இணைய விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டது. 

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி இல்லை

      காங்கிரஸ் கட்சியின் மேல் இடம் ஆம் ஆத்மி கட்சி உடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் கட்சியின் மாநில தலைமை ஆம் ஆத்மி உடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை.  ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 6 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.  காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

      காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை தொகுதி தொண்டர்கள் தான் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.  மேலும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 15 வருட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினை அப்புறப்படுத்திவிட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  டெல்லியில் 7 தொகுதிகளிலும் மே 12 – ஆம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

Related posts

கைலாசா NO lockdown – வீடியோக்கள் வெளியிடும் பெண் சீடர்கள்!

World News

கடினமான பாறைகள்: சுர்ஜித்தை மீட்க தொடரும் போராட்டம்

World News

ஹெல்மெட் அணிந்து வெங்காய விற்பனை (Video)

World News