சுருண்ட தலைமுடி கொண்டவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஹேர் ஸ்டைலை செய்ய முடியாமல் அவதியுறுவர். இப்போது நாம் வீட்டிலேயே சுருண்ட தலைமுடியினை நேராக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆளி விதை- 2 ஸ்பூன்
கான்பிளவர்- 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஆளி விதையினைப் போட்டு 15 நிமிடங்கள் காய்ச்சவும்.
2. அடுத்து ஆளி விதையில் உள்ள ஜெல்லினை மட்டும் வடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து மற்றொரு கிண்ணத்தில் நீர் ஊற்றி அதில் கான்பிளவர் போட்டு க்ரீம் பதம் வரும் வரை கிளறவும்.
4. இறுதியாக ஆளி விதை ஜெல், கான்பிளவர் க்ரீம், தேங்காய் எண்ணெய் மூன்றையும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
இந்த க்ரீமை தலைமுடியில் அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்துக் குளித்தால் தலைமுடி நேராகிவிடும்.