fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

நாவூறும் சுவையில் தர்பூசணி அல்வா

கோடைக்காலங்களில் அதிகமாக சாப்பிடக் கூடிய பழம் தர்பூசணி. இதில் நீர்ச்சத்து அதிகமாகவே இருக்கும் இந்த பழத்தை வைத்து அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

நாவூறும் சுவையில் தர்பூசணி அல்வா

தர்பூசணி அல்வா - Watermelon Halwa

நாவூறும் சுவையில் தர்பூசணி அல்வா நாவூறும் சுவையில் தர்பூசணி அல்வா Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தர்பூசணிப் பழம் (சிறியது) – 1
  • வெல்லம் – அரை கிலோ
  • தேங்காய்ப்பால் – அரை டம்ளர்
  • நெய் – 50 கிராம்,
  • முந்திரி -10
  • ஏலக்காய்த்தூள்- சிறிய அளவு

Instructions

தர்ப்பூசணியில் விதைகளை நீக்கி சதை பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும். பாதிபதம் வந்ததும் தர்ப்பூசணி கூழ் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவிடவும். இடையிடையே நெய் சேர்த்து நன்கு கிளறி கொடுக்கவும். கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள் வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும். நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி பரவலாக வைக்கவும் ஆறியதும் விரும்பிய அளவில் துண்டுகள் போடவும். இப்பொழுது தர்ப்பூசணி அல்வா தயார். இது சுவையும் சத்தும் மிக்கது.

 

 

    

Related posts

கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை

N N

வீடே மணக்கும் வான்கோழி குழம்பு!!

N N

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வடகறி !!!

N N