fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவகார்த்திகேயனுடன் இணையும் விவேக்

சீம ராஜா படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் நகைச்சுவை நடிகர் விவேக் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன்  இணையும் விவேக்

     ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்திலும். ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலு நடிக்கிறார்ம். இரும்புத்திரை என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் பி. எஸ். மித்திரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்திலும், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பி. எஸ். மித்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ என்ற படத்தில் அவர் முதன்முறையாக ‘ஜனங்களின் கலைஞன்’ விவேக்குடன் இணைந்து நடிக்கிறார்

சீனியர் நகைச்சுவை  நடிகரான விவேக், வெள்ளை பூக்கள் என்ற படத்தில், நடித்து வருகிறார். இளம் நடிகர் சிவகார்த்திகேயனுடன்  முதன் முதலாக இணைந்து ‘ஹீரோ’ படத்தில் நகைச்சுவையாக நடித்துள்ளார் விவேக். இதனிடையே ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷனும், இவானாவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவா நடித்த மிஸ்டர் லோக்கல் படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Related posts

சீரியியலில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன்

N N

ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியான “கமனம்” ட்ரைலர்..!

TamilTwin India

சாந்தனுவின் இராவண கோட்டத்தில் நாயகியாக ஆனந்தி

N N