Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்சற்றுமுன் ஜெனீவா சென்றடைந்தார் யாழ்.மாநகர முதல்வர்(Photo)

சற்றுமுன் ஜெனீவா சென்றடைந்தார் யாழ்.மாநகர முதல்வர்(Photo)

நாளையதினம் ஜக்கியநாடுகள் சபையின் 52 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாக உள்ளது.

இதனை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நாளை பிற்பகல்-2 மணியளவில் ஒன்று கூடல் ஒன்றும் இடம்பெற உள்ளது.

இவற்றில் கலந்து கொள்வதற்காக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று சற்று முன்னர் ஜெனீவா விமானநிலையம் சென்றடைந்துள்ளார்.

இதேவேளை, நாளையதினம் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஒன்றுகூடலில் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொண்டு தமிழ்மக்களின் நீதிக்கான குரலுக்கு வலுச் சேர்க்குமாறு அன்போடும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என யாழ்.மாநகர முதல்வர் ஜெனீவாவிலிருந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular