fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

படப்பிடிப்பு சண்டைக்காட்சியில் விஷால் காயம்

தமிழ் திரைப்பட நடிகரான விஷால் செல்லமே படத்தின் மூலம் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமானர். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு போது சண்டைக்காட்சியில் காயம் ஏற்ப்பட்டு உள்ளது.

படப்பிடிப்பு சண்டைக்காட்சியில் விஷால் காயம்

     அயோக்கியா படத்தில் விஷால் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 19 ம் தேதி வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார். விஷாலுடன் தமன்னா இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது. படத்திற்காக 50 நாட்கள் துருக்கி நாட்டில் படத்தை எடுக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த வாரம் துருக்கி சென்றார்கள். அங்கு உள்ள கேப்படோசியாவில் மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது. காரில் செல்லும் வில்லன்களை பைக்கில் வி‌ஷால் துரத்தி செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி விழுந்தது. கீழே விழுந்த விஷால் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Related posts

ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா

N N

ரசிகர்களுக்காக அஜித் எடுத்த முடிவு!!

N N

மாளவிகா மோகனனின் விருப்பம் இதுதான்!!

N N