fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ராதாரவிக்கு விஷால் கண்டனம்
சினிமா

ராதாரவிக்கு விஷால் கண்டனம்

கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நாயகி நயன்தாரா, இயக்குனர் சக்ரி டோலட்டி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக மூத்த நடிகர்  ராதாரவி, கரு.பழனியப்பன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராதாரவி  நயன்தாராவை பற்றி அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.  இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலர் ராதாரவி மீது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்தச் சர்ச்சையை அடுத்து நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று விஷாலின் ட்விட்டரில் பலர் கேள்வி  எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில், நடிகர் விஷால் ட்விட்ட்ரில் கூறியது, அன்புள்ள ராதாரவி சார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். தற்போது நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதாவது  பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதைக் கண்டிக்கிறேன். உங்களுக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வளருங்கள் சார். இனிமேல் உங்கள் பெயரை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயர்  என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Related posts

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி !

TamilTwin India

நேரடியாக OTTயில் வெளியாகும் ‘நரகாசூரன்’, அதிர்ச்சியில் ரசிகர்கள் !

TamilTwin India

ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் – பார்த்திபனின் டுவிட்

N N