fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது
Home » விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது
சினிமா

விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் விஷால்.  இவர் தற்போது தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார்.  நடிகர் விஷால் இப்பொமுது நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் சங்க தலைவாராவும் இருந்து வரும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷாவை காதலித்து வருகிறார். இருவருக்கும் வருகிற 16-ம் தேதி ஐதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைப்பெற இருக்கிறது. நடிகர் விஷால் அவரின் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய பிறகு தான் அவரின் திருமணம் என்று தெரிவித்துள்ளார் .       

     பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.  இவர் அமெரிக்காவில் பட்ட படிப்பு படித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதமாக காதலித்து வருகின்றனர். இப்பொழுது இருவீட்டாரின் சம்மதத்துடனும்,  சென்னையில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்காவை மிஞ்சும் தங்கை, விருது விழாவிற்கு படு கிளாமர் உடையில் வந்த அக்சரஹாசன்

TamilTwin India

எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாத விஷயத்தை மீண்டும் செய்த டி. இமான்

TamilTwin India

விதார்த்தின் ஆயிரம் பொற்காசுகள் கோடையில் ரிலீஸ்

N N