fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மது போதையில் புது முக நடிகரை தாக்கிய விமல்

                நடிகர் விமல், இவர் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார்.  இந்நிலையில் இவர் மது போதையில் புது முக நடிகர் ஒருவரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளனர். 

மது போதையில் புது முக நடிகரை தாக்கிய விமல்

      புது முக நடிகரான அபிஷேக், இவர் பெங்களூரை சேர்ந்தவர்.  இவர் தற்போது  ‘அவன் அவள் அது’என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அபிஷேக் விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருக்கிறார்.  நேற்று அபிஷேக் போனில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது விமல் மற்றும் அவருடைய ஆட்கள் அங்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அபிஷேக்கை கையால் தாக்கி உள்ளனர்.  இவர்கள் தாக்கியதில் அபிஷேக்கின் கண், நெற்றி, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது.  அபிஷேக் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த பிரச்சனை தொடர்பாக அபிஷேக் விமல் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.   நடிகர் விமல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Related posts

விஜய் சேதுபதி – எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது

N N

ஸ்ரேயாவின் நடன வீடியோ

N N

அமலாபாலுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

N N