நடிகர் விக்ரம் தற்போது நடித்துக் கொண்டு இருக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் நடிகர் விக்ரம் உடன் அக்ஷரா ஹாசன், அபி நாசர் ஆகியோரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்தினை ராஜேஷ் எம். செல்வா இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து உள்ள நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.

நடிகர் விக்ரம் பாடியதைக் குறித்து இசை அமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் பாடியது மகிழ்ச்சியாக உள்ளது மேலும் அவர் முழு உற்சாகத்துடன் இப்பாடலை பாடிக் கொடுத்து இருக்கிறார். காலையில் இப்பாடலை கேட்கும் பொழுது அது முழு உற்சாகத்தினையும் கொடுத்தது என அவர் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றனர். ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.