விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து பாராட்டு பெற்றுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் சமந்தா தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார். படமானது திரைக்கு வர இருக்கிறது. அடுத்தபடியாக ஒப்பந்தமாகியுள்ள இன்னோரு படத்திலும் விஜய் சேதுபதி தீவிரம் காட்டி வருகிறார். இயக்குநர் அருண்குமார், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கியவர். அருண்குமார் விஜய் சேதுபதியின் 26– வது படத்தை இயக்கவுள்ளார்.

சிந்துபாத் என்னும் பட தலைப்பில் சேதுபதியின் 26-வது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது. . சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். அருண்குமார் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சிந்துபாத் படத்தை ஏப்ரல் 11ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது