fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய்சேதுபதி
சினிமா

அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய்சேதுபதி

தமிழ் திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி சினிமாவிற்கு சிறு வேடங்களில் நடித்து அறிமுகமானவர். தற்சமயம் அவர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். 

     ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் இந்தியாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று மொழிகளிலும் ஒரு புரமோஷன் பாடலைக் கம்போஸ் செய்துள்ளார். கடந்த 1ஆம் தேதி இந்தி புரமோஷன் பாடல் வெளியான நிலையில் சற்றுமுன் தமிழ்ப்பாடல் வெளியானது. அவெஞ்சர்ஸ் ஆனந்தம் என்று கூறப்படும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய்சேதுபதி

           இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தமிழ் டிரைலருக்கு விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரிய பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் தமிழ் வசனத்தை எழுதியவர் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் நடைபெற்ற அவெஞ்சர்ஸ் தமிழ் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

நிர்பயா போன்று நானும் கொடுமைகள் அனுவித்தேன், நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்

TamilTwin India

முடங்கிய வேளையில் கிளாமர் குறையாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிகில் பட நடிகை !

TamilTwin India

இந்த சீனுக்கு எல்லாம் தியேட்டரே அதிரும் வலிமை படம் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்.!

TamilTwin India