வெற்றி பெற்ற படங்கள் அனைத்தினுடைய இரண்டாம் பாகம் தயாரிப்பதே தற்போது டிரெண்டாக உள்ளது. அவ்வகையில், சிங்கம் படம் 3 பாகங்கள் எடுக்கப்பட்டது, மாரி 2, சார்லி சாப்ளின் 2, விஸ்வரூபம் 2, வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2 போன்ற படங்கள் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன. கடந்த 2016 – ம் ஆண்டு சேதுபதி திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியினைப் பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான போலிஸ் வேடத்தில் வருவார். இரண்டாம் பாகத்திலும் இவர் போலிஸாக வருவார் எனக் கூறப்படுகிறது.

தற்போது அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி சிந்துபாத் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. கூடிய விரைவில் இப்படம் வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.