fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சூர்யா – சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு விஜய்குமார் வசனம்

நடிகர் சூர்யா என்ஜிகே படத்தின் நடிப்பை தொடர்ந்து. அவர் தனது தயாரிப்பில் உறியடி 2 படத்தினை உருவாக்கியுள்ளார். உறியடி 2  படத்தை இயக்கி உள்ள விஜய்குமார் அந்த படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யா – சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு விஜய்குமார் வசனம் எழுத இருக்கிறார்.

உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அறிமுகமான இயக்குனர் விஜய் குமார் இயக்கி, அந்த படத்தில் நடித்துள்ளார். உறியடி படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது இந்த விழாவில் படத்தின் சூர்யா பேசும் போது படக்குழுவினர் தன்னிடம் சொன்னதை பேசினார். இந்த படம் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காது. உங்களை பாதிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெளிவாக சொன்னார்கள். இந்த உண்மைத்தன்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது என்று கூறியுள்ளார்.

சூர்யா - சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு விஜய்குமார் வசனம்

     சூர்யா நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், தனக்குனு எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஜய்குமார் தான் வசனம் எழுத இருக்கிறார் என்று பேசி இருக்கிறார் சூர்யா.

Related posts

கலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுத்த ரஜினிகாந்த்

N N

டகால்டி படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சந்தானம்

N N

மாஸ் மகாராஜா படத்தில் இணையும் ஹீரோயின் த்ரிஷா !

TamilTwin India