fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் விஜய் ஆண்டனி

தமிழ்நாட்டில் முன்னணி ஒலிப் பொறியாளராகவும், இசைமைப்பாளராகவும் இருந்தவர் விஜய் ஆண்டனி. இவர் இசை அமைத்து முதலில் திரைக்கு வந்த படம் சுக்ரன் திரைப்படமாகும். இவர் நான், சலீம் போன்ற திரைப் படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்சமயம் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜூன் நடிப்பில் உருவாகி உள்ள கொலைகாரன் படத்திற்கு தலைப்பை விஜய் ஆண்டனி வைத்தாக பட இயக்குனர் கூறி இருக்கிறார்.

கொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் விஜய் ஆண்டனி

     கொலைக்காரன் படத்தில் இசைமைப்பாளராக இருந்து முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை பற்றி ஆண்ட்ரூ லூயிஸ் பேட்டியில் கூறியது: விஜய் ஆண்டனி இந்த படத்தில் சைக்கோ கொலைக்காரனாகவும் அர்ஜுன் காவல் துறை அதிகாரியாகவும் நடித்து உள்ளார்கள். இதில் விஜய் ஆண்டனி கொலைகாரனாக இருக்க காரணம் என்ன ? என்பதே கதை என்று கூறி இருக்கிறார்.

     இந்தப் படத்துக்கு வெளி இசையமைப்பாளரான சைமன் இசையமைத்து இருக்கிறார். முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2012 ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய அழகியாக பட்டம் வென்றவர் ஆஷிமா விஜய், இவர் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனிதான் தலைப்பை தேர்ந்தெடுத்து வைத்தார் என்று இயக்குனர் கூறியுள்ளார்.    

Related posts

கேரளாவில் விருது பெரும் தமிழ் நட்சத்திரங்கள் !

TamilTwin India

ட்விட்டரில் கணவரை மறைமுகமாக எச்சரித்த விஜே அஞ்சனா

TamilTwin India

சிம்புவுக்கு கதை ரெடி பண்ணிட்டேன், ஊரடங்கில் மிஷ்கின் செம பிஸி !

TamilTwin India