நடிகர் விதார்த் – ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள். இப்படத்தினை அறிமுக இயக்குநரான ரவி முருகையா இயக்கி இருக்கிறார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் பல வருடம் இருக்கின்ற கோயர் தன்னுடைய சொந்த நிறுவனமான கே ஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படத்தினை வெளியிடுகிறார். கோயர் ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார்.

ஆயிரம் பொற்காசுகள் படத்தினைப் பற்றி கோயர் கூறுகையில், இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் விதமாக காமெடி காட்சிகளுடன் இப்படம் உருவாகி இருக்கிறது. கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் நடிகர் விதார்த்திற்கு ஒரு புதையல் ஒன்று கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுவதும் தெரிய வருகிறது. ஊரில் உள்ளவர்கள் அனைவரும் புதையலில் பங்கு கேட்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதே கதையாக உருவாகி இருக்கிறது. ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திரைப்படமாக அமைந்து இருக்கிறது என கோயர் கூறியுள்ளார்.