Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழில் தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்துக் கெளரவிக்கும் வென்மேரி விருதுகள் வழங்கும் விழா(Photos)

யாழில் தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்துக் கெளரவிக்கும் வென்மேரி விருதுகள் வழங்கும் விழா(Photos)

வென்மேரி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்துக் கெளரவிக்கும் வென்மேரி விருதுகள்-2021-2022 வழங்கும் விழா நாளை மறுதினம் புதன்கிழமை (17.8.2022) பிற்பகல்-3.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் மேற்படி அறக்கட்டளையின் தலைவர் வென்சிலாஸ் அனுரா தலைமையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

மேற்படி விழாவில் பேராளுமை விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், பல்துறைசார் ஆளுமை விருதுகள், இளையோர் ஊக்குவிப்பு விருதுகள் எனப் பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.

வென்மேரி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலாவது தடவையாக இந்த விருது வழங்கும் விழா இடம்பெற உள்ளதாக மேற்படி அறக்கட்டளையின் தலைவர் ஸ்தாபகத் தலைவரும், கவிஞருமான வென்சிலாஸ் அனுரா தெரிவித்துள்ளார்.

எமது மண்ணிலுள்ள பல சாதனையாளர்களின் சாதனைகள் இனம் காணப்படாமலேயே அவர்கள் வாழ்ந்து மறைந்து விடுவதாக எனது தந்தை சிறு வயது முதல் அடிக்கடி கூறுவார். இதுவே என் மனதில் விதையாய் விழுந்து காலப் போக்கில் விருட்சமாக வளர்ந்தது.

எதிர்வரும் காலங்களிலும் வருடா வருடம் பல்வேறு துறைகளிலும் தமிழில் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆளுமைகளை இனம் கண்டு கெளரவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்படி விருதுகள் வழங்கும் விழாவில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular