ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் 20.01.2020 அன்று ஆரம்பிக்கப்பட்ட மந்திகை- தம்பசிட்டி-அல்வாய் வீதியின் புனரமைப்பின் போது வெட்டப்பட்ட வெள்ளிருவை வீதி கடந்த ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை திருத்தம் செய்யப்படாத நிலையில் காணப்படுகிறது.
இன்னும் ஒரு வீதியுடன் இணையும் இவ் வீதியானது கரவெட்டி- தெற்கு மேற்குப் பிரதேச சபைக்கு உரிய இவ் வீதியால் பலர் பயணிக்கின்ற நிலையில் இவ்வீதிப் புனரமைப்பின் போது பழைய வீதி அகழப்பட்ட நிலையில் விபத்துக்களும் இடம்பெறுகின்றன.

இதேவேளை, உரிய அதிகாரிகள் இதுவரை இவ் வேலைத் திட்டத்தினை நிறைவேற்றாத நிலையில் சென்ற வருட வேலைத் திட்டத்திற்குத் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக் காரணம் காட்டுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)