fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » வேகக்கட்டுப்பாட்டை மீறி நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை மீறி நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்

வெலிஓயாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் இன்று(08) விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளை ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். வாகன சாரதியான தந்தை எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்கள், இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த விபத்து அதிவேகம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வவுனியா வேம்பம்குளத்தில் விபத்து; இருவர் காயம்!

World News

முந்திக் கொண்டு புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன யாழ்.மாநகர முதல்வர்

TamilTwin

பாடசாலையை மூடுவது மாணவர்களின் எதிர்காலத்தை மூடுவதாகும் – ஜீ.எல்.பீரிஸ்

SL News