Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தில் நஞ்சற்ற மரக்கறிகள் அறுவடை

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தில் நஞ்சற்ற மரக்கறிகள் அறுவடை

இயற்கைப் பசளையைப் பயன்படுத்தி நஞ்சற்ற மரக்கறிகளை அறுவடை செய்வதனைப் பொது மக்களுக்கும், அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் முகமாக சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத் தோட்டத்தின் அறுவடை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி.யசோதா உதயகுமார் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பயற்றங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய்,
துபாய் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறிகளும், மாங்காய், கொடித் தோடை என்பனவும் அறுவடை செய்யப்பட்டன

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular