Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.மாவட்டச் செயலகத்தில் மரக்கறி அறுவடை(Photos)

யாழ்.மாவட்டச் செயலகத்தில் மரக்கறி அறுவடை(Photos)

வீட்டுத் தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரச நிறுவனங்கள், திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய யாழ்.மாவட்டச் செயலக விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கத்தரி, தக்காளி, மிளகாய் ஆகிய மரக்கறி நாற்றுக்கள் நாட்டப்பட்டு அதன் அறுவடை நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(09.8.2022) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மரக்கறி உற்பத்தி நடவடிக்கைளை விரிவுபடுத்தும் ஆலோசனைகளையும் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular