Friday, February 3, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்ஏகமனதாக நிறைவேறியது வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம்

ஏகமனதாக நிறைவேறியது வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம்

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பிப்பதற்கான விசேட கூட்டம் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இன்று புதன்கிழமை(30.11.2022) முற்பகல்-10 மணி முதல் மேற்படி சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் சிலர் வரவு செலவுத் திட்டம் தொடர்பான தமது வாதங்களை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சபையின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட தவிசாளர் உள்ளிட்ட 35 உறுப்பினர்களும் ஆதரித்த நிலையில் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, 39 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் வடக்குப் பிரதேச சபையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் இரண்டு உறுப்பினர்களுக்கான பதவி வெற்றிடமாக உள்ளதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இன்றைய சபைக் கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular