Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்கிழக்கில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கற்றலுக்காக கொப்பிகள் கையளிப்பு(Photos)

கிழக்கில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கற்றலுக்காக கொப்பிகள் கையளிப்பு(Photos)

இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபையின் தலைமைச் செயலக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஒருங்கிணைப்பு அமைப்பாளர் சிவத்திரு.பாஸ்கரனால் வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(03.7.2022) அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயப் பிரதமகுரு சண்முகம் ஐயா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மேற்படி அறநெறிப் பாடசாலை அதிபர் கார்த்தீபன், அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கற்றலுக்காக அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular