இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள் பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை மக்கள் பொறுப்பற்ற ராஜபக்ஷே ஆட்சியின் மீது கடும் அதிருப்திக்குத் தள்ளப்பட்டனர்.
மேலும் ராஜபக்ஷே பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்த போராட்டம் தீவிரம் அடைந்தது.
நிலைமை மேலும் மோசமானதைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அறிவிப்பினைத் தொடர்ந்து தலைமறைவும் ஆகினார். இந்தநிலையில் ராஜபக்ஷே வெளிநாடு தப்ப முயல்வதாகக் கூறப்படுகின்றது.
ராஜபக்ஷேவுக்கு எந்தவொரு நாடும் ஆதரவு தரக் கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ராஜபக்ஷே தலைமறைவு ஆனது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்ட கவிதை பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.
வைரமுத்து ட்விட்டரில்,
“நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் ‘தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே…
ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே… ஓ சர்வதேச சமூகமே!
இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு” என்று பதிவிட்டுள்ளார்.
நான்கு பக்கம்
— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2022
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே…
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு#SriLanka